Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூன் 20 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயின் விலை, என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பின் காரணமாக, அதிகளவான விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணச் சந்தைகளில் சின்ன வெங்காயம் அதன் அளவு மற்றும் தரத்துக்கமைய 140 ரூபாய் தொடக்கம் 210 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. விவசாயிகளிடம் இருக்கும் வெங்காயமானது உள்ளூர் சந்தையின் கேள்வியைச் சமாளிக்க முடியாமையால் இந்தளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தற்போது புகையிலை அறுவடை செய்துள்ள விவசாயிகளும் இன்னும் சில விவசாயிகளும் இணைந்து தங்கள் நிலங்களில் வெங்காயப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணச் சந்தைகளில் பச்சைமிளகாய் ஒரு கிலோகிராம் 500 ரூபாய் தொடக்கம் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. மழை மற்றும் காற்றுக் காரணமாக பூக்கள் உதிர்ந்தமையால், பச்சைமிளகாய் விளைச்சல் குறைந்து, இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .