Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்;தீவு விசுவமடு பொதுச்சந்தைக்கான நிரந்தரக் கட்டடம், சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழுள்ள விசுவமடு பொதுச்சந்தைக்கான நிரந்;தரக்கட்டடம் அமைக்கப்படாததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிக கொட்டகைகளில் பெரும் சிரமங்களின் மத்தியில் இயங்கி வருகின்றது.
இதற்கான நிரந்தரக்கட்டடம் கடந்;த ஆண்டுகளில் அமைப்;பதற்கான நடவடிக்;கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், பொதுச்சந்தைக்குரிய காணிப்பிணக்கு காரணமாக அமைக்கப்படாமல் இருந்தது.
இதற்கான காணிப்பிணக்கு கடந்த ஆண்;டின் இறுதியில் தீர்;க்கப்பட்டதையடுத்து, தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை நிதியிலிருந்து சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் இவ்வருட இறுதிக்கும் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago