2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வெட்டுக்குத்தாகியது பழைய பகை

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

காரைநகர், விக்காவில் பகுதியில் திங்கட்கிழமை இருவருக்கிடையில் ஏற்பட்ட  கருத்து முரண்பாடு வெட்டுக்குத்தில் முடிந்துள்ளது. இதில் வெட்டுக்காயங்களுக்கு இழக்கான  சாமி ஐயா (வயது 49) மற்றும் என்.சதாசிவம் (வயது 70) ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தளாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பழைய குடும்பப்பகை காரணமாக இருவருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன முதியவர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்து மற்றையவரை ஏசியுள்ளார். இதன் பின்னரே இருவரும் மோதிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால்  70 வயது முதியவர் மற்றவரை தாக்கியுள்ளார். அதே கத்தியை பறித்து மற்றையவரும் 70 வயதான முதியவரை தாக்கியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பின்னர், இருவரும் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .