2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாதோர் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் காயம்

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ்ப்பாணம், கைதடி, நாவற்குழி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இனந்தெரியாதோர் சிலர், அந்த வீட்டிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட நால்வர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், கேதீஸ்வரன் சுகந்தன் (வயது 25) அவரது மனைவி சுகந்தன் நமீரா (வயது 26), இவர்களது குழந்தைகளான சுகந்தன் கிருத்திகன் (1 ½ வயது) மற்றும் சுகந்தனின் சகோதரியான இராஜதீபன் யாழினி (வயது 29) ஆகியோர் காயமடைந்த நிலையில்,  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் வாகனத்தில் வந்த நால்வரடங்கிய குழுவினரே, மேற்படி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X