Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 05 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்களாகவிருந்து கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளின் பற்றைகளை துப்பரவு செய்வதற்கு கனரக இயந்திரங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர்களும் வலிகாமம் கிழக்கில் வளலாய் பகுதியில் 233 ஏக்கர்களும் என மொத்தம் 701.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
கடந்த 25 வருடங்களாக மக்களின் பயன்பாடற்றுக் காணப்பட்ட இந்தக் காணிகளில் பாரியளவு மரங்கள், பற்றைகள் என்பன வளர்ந்து காணப்பட்டன. வீடுகள் பலவும் அழிக்கப்பட்டமையால் அந்த இடத்தில் மரங்கள் வளர்ந்திருந்தன.
அவற்றை அகற்றுவதற்கு அரசாங்கம் உதவிகள் செய்யும் என்ற போதும், அதுவரையில் காத்திருக்காமல் தங்கள் காணிகள் விடுவிக்கப்பட்ட ஆர்வத்தில் மக்கள் அதனை துப்பரவு செய்ய தொடங்கிவிட்டனர்.
ஜே.சி.பி இயந்திரம் ஒன்றை மணித்தியாலத்துக்கு 3,000 ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி துப்பரவுப் பணிகளை பொதுமக்கள் தொடங்கியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் ஜே.சி.பி வாடகைக்கு விடும் பலர் விடுவிக்கப்படும் பகுதிகளிலுள்ள காணிகளை துப்பரவு செய்வதற்கு வாடகைக்கு விட்டு வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
3 hours ago