2025 ஜூலை 19, சனிக்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட மாவட்டச் செயலாளர்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாகவிருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இன்று வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வீமன்காமம் வடக்கு, தையிட்டி வடக்கு, மயிலிட்டி வடக்கு ஆகிய பகுதிகளையும், முன்னர் விடுவிக்கப்பட்ட வறுத்தலைவிளான் பகுதியையும் பார்வையிட்டார்.

இதன்போது, வறுத்தலை விளான் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்காக அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கியின் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

யாழ்.மாவட்ட காணி மேலதிக செயலாளர் சு.முரளிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகன், விடுவிக்கப்பட்ட பகுதிகளின் கிராம அலுவலர்கள் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X