2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் ஆடை வடிவமைத்தலுக்கான தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இக்கற்கைநெறிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி மாதம் 07ஆம் திகதி ஆகும்.

கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தையல் பயிற்சி நெறியில் ஏற்கனவே பங்குபற்றி  சான்றிதழ் பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இப் பயிற்சியானது, முதல் 6 மாத காலப் பகுதிக்கு என்.வி.கியூ பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கப்படும்.

பின்னர் அடுத்து வரும் 6 மாத காலப்பகுதிக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் அல்லது தகுதி வாய்ந்த தையல் பயிற்சி நிலையங்களில் இணைத்து வழங்கப்படும்.

ஒவ்வொரு பயிற்சி நிலையத்திலும் 25 பயிலுநர்கள் மட்டுமே இணைக்கப்படவுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 021- 2285069 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி  அலுவலகத்துடனோ தொடர்பு கொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X