2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இலங்கை மக்கள் அரங்க நாடகச் செயற்திட்டத்தின் நான்காவது கட்டம் வடக்கில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள இளம் நாடகக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இந்தச் செயற்றிட்டம் நுண்கலை மற்றும் அழகியல் பல்கலைக்கழகம், மாகாணக் கல்வி அமைச்சு என்பவற்றுடன் இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் மூலம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த நாடகம் மற்றும் மக்கள் அரங்கம் வீதி நாடக ஆற்றுகை மேடை நடிப்பு ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஆண் பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

நிபுணத்துவ பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் மொத்தம் 30 மக்கள் அரங்க நாடகங்கள் தயாரிக்கப்படும். இவை யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய பாடசாலைகளில் அரங்கேற்றம் செய்யப்படும்.

பயிற்சி இலவசமாக இடம்பெறவுள்ளதோடு, பயிற்சி முடிவில் கள ஆற்றுகையும் இடம்பெறும். இதன்போது உணவு தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பயிற்சி காலத்தில் போக்குவரத்துக் கொடுப்பனவும் கள ஆற்றுகையின் போது நாளாந்தக் கொடுப்பனவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும்.

நாடகக் கழகங்கள், ஆற்றுகைச் சங்கங்கள் என்பவற்றில் ஏற்கெனவே அங்கத்துவம் வகிக்கும் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மொத்தமாக 36 கலைஞர்கள் மாத்திரமே இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டத்துக்காக தெரிவு செய்யப்படுவர்.

செயற்திட்ட முடிவில் சர்வதேச மக்கள் அரங்க ஆற்றுகை மாநாடு ஒன்றை இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் நடத்தவுள்ளதால், தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு அதில் பங்குபற்றும் வாய்ப்பும் வழங்கப்படும்.

எனவே, பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் மக்கள் அரங்கச் செயற்றிட்டம் இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் இலக்கம் 429, நாவல வீதி, ராஜகிரிய என்னும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X