2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விதிகளை மீறிய மதுபானசாலைகள் விசாரணை ஆரம்பம்

Gavitha   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

மதுவரித் திணைக்களத்தின் சட்டதிட்டங்களை மீறிய வகையில் யாழ்ப்பாணம் இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, மதுவரித் திணைக்களத்திலிருந்து விசேட விசாரணைக்கு குழு, யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதுடன் புதன்கிழமை (11) தொடக்கம் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபானசாலைகள், சட்டதிட்டங்களை மீறிய வகையில் செயற்படுகின்றன என பொதுமக்களால் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார மற்றும் யாழ்;ப்பாணம் மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேததநாயகன் ஆகியோருக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் மதுவரித் திணைக்களத்துக்கு ஆளுநரும், மாவட்டச் செயலரும் அறிவித்தனர்.

அதற்கிணங்க இந்தக் குழு, யாழ்;ப்பாணத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கின்றது. மதுபானசாலை உரிமையாளர்கள் மற்றும் முறைப்பாட்டாளர்களிடம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து குறித்த குழு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

இந்த விசாரணை இன்று வியாழக்கிழமை (11) இடம்பெறவுள்ளதுடன் 9 பேர் கொண்ட இந்தக் குழு விசாரணையை மேற்கொண்டு, அதன் அறிக்கையை மதுவரித் திணைக்கள தலைமை அலுவலகத்திடம் கையளிக்கும்.

ஊர்காவற்றுறையில் 4 மதுபானசாலைகளும் புத்தூர், ஊர்காவற்றுறையில் தலா 2 மதுபானசாலைகளும் பருத்தித்துறை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா 1 மதுபானசாலையும் இவ்வாறு விதிமுறைகளை மீறி இயங்குவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயம், பாடசாலை உள்ளிட்ட பொது இடங்களிலிருந்து மதுபானசாலைகள் 100 மீற்றர் தொலைவிலும், மதுபான விடுதிகள்; 250 தூரத்திலும், மதுபானத்தை சில்லறையாக விற்பனை செய்யும் விடுதிகள் 500 மீற்றர் தூரத்திலும் இருக்க வேண்டும் என்பது மதுவரித் திணைக்களத்தின் நியதி என்பது குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .