2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வித்தியா கொலை: டீ.என்.ஏ அறிக்கை சமர்ப்பிப்பு

Thipaan   / 2016 மே 18 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட மரபணுப் (டி.என்.ஏ) பரிசோதனை அறிக்கை, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்தக் கொலை வழக்கு தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில், பத்து பேரது வழக்கு தனியாகவும், ஏனைய இருவரதும் வழக்கு தனியாகவுமே இதுவரை காலமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. எனினும், இன்று புதன்கிழமையன்று, இவ்விரு வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு, ஒரு வழக்காகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மிக நீண்டகாலமாக மன்றில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, அப்பரிசோதனைகளை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தினால், குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அவ்வறிக்கை, நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X