2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலைக்கு ஆண் வைத்தியர் வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர ஆண் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பெண் வைத்தியர் ஒருவர் கடமையாற்றி வந்தார். அவர் கர்ப்பமுற்றமையால், அவருடைய போக்குவரத்து நிலைமையைக் கருத்திற்கொண்டு அவரை காரைநகர் வைத்தியசாலைக்கு, யாழ். பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி என்.நந்தகுமார் மாற்றியிருந்தார்.

இதனால், நெடுந்தீவு வைத்தியசாலைக்கு வைத்தியர் இல்லாமையால் அம்மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வைத்தியர் இல்லாமையால், உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டிய ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அங்கு இடம்பெற்றுள்ளது.

எனவே,  ஆண் வைத்தியர் ஒருவரை இங்கு நியமித்தால் அவர் தொடர்ந்து இங்கு கடமையாற்ற முடியும் என்பதன் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X