Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சட்டவிரோதமான முறை மற்றும் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனையை மீறி, சுண்ணாம்பு கல் அகழ்ந்த மூன்று பெக்கோ வாகனங்களை கைப்பற்றியதுடன் வாகன உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையையடுத்து, இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
வளலாய் மற்றும் வயாவிளான் பகுதிகளில் சுண்ணாம்பு கல் அகழ்வு நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரப்படையினர் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கனியவளங்கள் மற்றும் சுரங்க அகழிவு பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை மீறி, விடுமுறை நாட்களில் கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் இரு வாகனங்களும், உரிய அனுமதிபத்திரம் இன்றி கல் அகழ்ந்த ஒரு பொக்கோ வாகனமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களையும், பெக்கோ இயந்திரங்களையும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago