2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வீதி விபத்தைக் கட்டுப்படுத்த பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு வீதி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸார் இன்று புதன்கிழமை (17) முதல் ஆரம்பித்துள்ளனர்.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம் ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இந்தச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களது பெற்றோர்களின் மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர் ஸ்டிக்கர்கள் பொலிஸாரால் ஒட்டப்பட்டன.

இந்தத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி வி.எம்.விஜயசிங்க,

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் தலைக்கவசம் அணிய வேண்டும். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X