Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 28 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கவனக்குறைவாக வாகனம் செலுத்தி வீதியால் நடந்து சென்ற ஒருவருக்கு விபத்தின் மூலம் காயம் ஏற்படுத்திய நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈட்டு தொகையாக 50 ஆயிரம் ரூபா வழங்குமாறு உத்தரவிட்டார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கு விசாரணை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விபத்தினை தடுக்கத் தவறியமைக்கு 3ஆயிரம் ரூபாய் அபராதமும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அபராததொகையினை செலுத்த நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் இருந்து நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தார், அவர் கோரியதற்கு அமைவாக 50 ஆயிரம் ரூபாயை நட்டஈட்டு தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago