2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: சாரதிக்கு விளக்கமறியல்

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில், ஒருவர் உயிரிழந்ததையடுத்து, விபத்துடன் தொடர்புடைய சாரதி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த வைத்தியலிங்கம் நடராஜா (வயது 79) என்ற நபர், வீதியில் நடந்துச் சென்ற போது, காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

படுகாயங்களுக்கு உள்ளான அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சாரதி, மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் ந.தம்பிமுத்துவின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சாரதியை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X