2025 ஜூலை 19, சனிக்கிழமை

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

பொன்னாலை பாலத்தில் திங்கட்கிழமை (04) இரவு  முச்சக்கரவண்டியும் தனியார் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தட்டாதெருச் சந்தி பகுதியைச் சேர்ந்த வீ.தவமணி (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மூன்று பேர் முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர்.

இதன்போது, பொன்னாலை பாலத்தில் முச்சக்கரவண்டி சிறிய உழவு இயந்திரத்தினை முந்தி செல்ல முற்படுகையில், எதிரே வந்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், முச்சக்கரவண்டி ஓட்டுனர் படுகாயங்களுக்குள்ளானதுடன், பயணித்த மூதாட்டி தலையில் காயங்களுக்குள்ளாகி காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X