Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 ஜனவரி 27 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மாங்குளம் - துணுக்காய் வீதியில் உள்ள வன்னிவிளாங்கும் பகுதியில் வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற பதில் தபாலதிபரான மாப்பாணப்பிள்ளை கதிர்காமநாதன் (வயது – 57) என்பரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
முதியவரை மோதிய வாகனம் நிறுத்தாமல் சென்றதையடுத்து, வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிப் போரின் போது தனது குடும்பத்தினரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த முதியவரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago