Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் விடுதிகளை விரைவாகப் பதிவு செய்யுமாறும் பதிவு செய்யப்படாத விடுதிகள் முற்றுகையிடப்பட்டு அந்த விடுதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் இன்று செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
'கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் சில விடுகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த 2013ஆம் ஆண்டில், வேலைக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு பெண்களை விடுதியொன்றில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
தற்போதும், அனுமதி பெறாமல் இருக்கும் விடுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
வெளிமாவட்டங்களிலிருந்து விடுதிகளுக்கு பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர். பெரிய வீடுகளில் ஒரு பகுதியிலுள்ள அறைகள் நாள் வாடகைக்கு கொடுக்கும் தொழிலையும் சிலர் செய்கின்றனர்.
ஆகையால், பதிவு செய்யப்படாத விடுதிகள் பிரதேச சபைகள் ஊடாக மாவட்டச் செயலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகளை முற்றுகையிட்டு, அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago