2025 ஜூலை 19, சனிக்கிழமை

விறகு வெட்டியவருக்கு 100 மணித்தியால சமுதாய சீர்திருத்தப் பணி

Gavitha   / 2016 ஜனவரி 05 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அரச வனபாதுகாப்பு திணைக்களத்துக்குச் சொந்தமான மணற்காட்டு பகுதிக்குள் நுழைந்து, சட்டவிரோதமான முறையில் விறகு வெட்டிய நபரை 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (04)  உத்தரவிட்டார்.

குடத்தனை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர், வனபாதுகாப்பு திணைக்களத்துக்குரிய காட்டுப்பகுதியில் விறகுவெட்டிய குற்றத்துக்காக பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, நீதிபதி 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

எனினும், குறித்த அபராத தொகையை செலுத்துவதற்குரிய பொருளாதார நிலமை அவரிடம் இருக்கவில்லை. இதனை சமுதாய சீர்திருத்த அதிகாரி நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, நீதவான் 100 மணித்தியாலம் சமூதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X