2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வாள் தூக்கியவருக்கு சிறை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வாள் கொண்டு ஒருவரை வெட்ட முற்பட்ட ஒருவருக்கு, மூவாயிரம் ரூபாய் அபராதமும் 2 மாத கடுழிய சிறைத்தண்டனையும் விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று தீர்ப்பளித்தார்.

கடந்த வருடம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பத்தகராறு காரணமாக, ஒருவரை குறித்த நபர் வாளால் வெட்ட முற்பட்ட போது, பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வாள் எடுத்துச்சென்ற குற்றத்துக்காக 1,500 ரூபாயும் வெட்ட முற்பட்ட குற்றத்துக்காக 1,500 ரூபாயும் அபராதமாக விதித்த நீதவான், 2 மாத கடுழிய சிறைத்தண்டனையும் விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X