2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெளிமாவட்ட சான்றிதழ்களை வழக்குவதில் பின்னடிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் வெளிமாவட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வழங்கப்பட்டு ஒரு மாதகாலம் ஆகியும் பதிவுச் சான்றிதழ் இது வரை கிடைக்க பெறாத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக உரிய அலுவலகரை சந்தித்து இது குறித்து வினவினால், பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதில் வழங்கப்படுகிறது. ஆனால் சான்றிதழ்கள் உரியவர்களிடம் கிடைக்கபெறாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து பிரதேச செயலகங்களும் கணனி மயப்படுத்தப்பட்ட பின்னரும் மக்களுக்குரிய சேவையை பெற்றுக்கொடுப்பதில் பிரதேச செயலகம் பின்னிற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.  இச்செயற்பாடு அக்கறையீனத்தையும் அசமந்தபோக்கினையும் எடுத்துக்காட்டுகிறது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தென்மராட்சி பிரதேச செயலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .