2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வாள் வீசிய ஐவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 04 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் வாளுடன் வெள்ளிக்கிழமை (02) கைதான சந்தேகநபர்கள் ஐவரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (04) உத்தரவிட்டதாக, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல கஹந்தவெல தெரிவித்தார்.

குறித்த நபர்களும் சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பாரதூரமான 6 குற்றச்செயல்களுடன் தொடர்பு உள்ளமை அறிமுடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக் குற்றச்செயல் ஒன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மானிப்பாய் பொலிஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் கைது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X