2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின்  திட்டத்தின் கீழ், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார செயற்றிட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்வாக திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களென 147 பயனாளிகளுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிமனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அருட் தந்தையர்கள், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சர்வேஸ்வரன், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் .எஸ்.சத்தியசீலன்,வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன்  மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .