Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண விவசாய அமைச்சால் மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், மறுவயற் பயிர்ச்செய்கைகையை ஊக்குவிக்கும் வகையில் மறுவயற்பயிர் விதைகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்துக்கு 123 பேர் என்ற அடிப்படையில், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் மீள்குடியேறிய விவசாயிகளில் இருந்து 615 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியில் உழுந்து, பயறு, நிலக்கடலை ஆகியவற்றின் விதைகள் அடங்கிய பொதியோடு மண்வெட்டி, கத்தி ஆகிய உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அபிவிருத்தி நிதியில் இருந்து மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இத்தாவில், முகமாலை, வேம்போடுகேணி, உழவனூர், நாதன்திட்டம் கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 123 விவசாயிகளுக்குமான விதை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (03) வேம்போடுகேணி சி.சி.த.க பாடசாலையில் இடம்பெற்றது.
இதில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு விதைப்பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago