2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘வங்கியால் பாதிப்படைவதே அதிகம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

வங்கியால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயனடைந்ததைவிட பாதிப்படைந்ததுதான் அதிகமெனத் தெரிவித்த தொழிலதிபர் வி.ஜெயேந்திரன், இதனை வங்கிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வங்கிகளில் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல், பலர் தற்கொலை செய்து வருவதாகவும் மக்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகச் சொல்லி, மக்களுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை கடனாளியாக்குவததாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே, வங்கிகள், மக்களுக்கு கடன்களை வழங்க முதல் மக்களின் நிலைமையைப் பார்க்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X