Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 மே 10 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டறை வயதான சிறுமி மரணமடைந்துள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சிறுமியின் தந்தை தொழிலுக்காக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தாய், சமையல் செய்து கொண்டுடிருந்துள்ளார். மேற்படி சிறுமி வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அவ்வாறே வீட்டுத்தோட்டத்துக்குள் சென்று, கிணற்றுக்கு அடியில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அதனை அந்தத் தாயும் அவதானித்துள்ளார். எனினும், தாய் அசட்டையாக இருந்துவிட்டார். இதனிடையே அந்த சிறுமி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
ஏதோவொரு சத்தம் கேட்டதை அடுத்து கிணற்றடிக்கு ஓடோடிச் சென்ற தாய், கிணற்றுக்குள் குழந்தை கிடப்பதை கணிடு, அபாய குரல் எழுப்பி உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
அவர்களின் உதவியுடன் சிறுமியை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதிலும், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டறை வயதான கருணாநிதி ரக்ஷிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெற்றோரின் கவனயீனம் காரணமாக இந்த அசாதாரண சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago