Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
“வடக்கின் உண்மை நிலை தொடர்பில், தெற்கில் தெரியப்படுத்தி, தென் பகுதி மக்கள் மத்தியில் உள்ள சில தவறான எண்ணங்களை நீக்க நாம் முயல்வோம்” என, அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு தெரிவித்தது.
அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் தெற்கின் மாத்தறை, மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர், யுவதிகள் 20 பேர், வவுனியா - பூந்தோட்டம் முகாமில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும், நேற்று (25) பார்வையிட்டனர். அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.
இதன்போது அம்மக்களின் அடிப்படை வசதிகளின் நிலை, மாணவர்களின் கல்வி நிலை, வாழக் கூடிய சூழல் தொடர்பில் ஆராய்ந்த இளைஞர், யுவதிகள், அம்மக்களின் நிலைமையைப் பார்த்து, தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
முகாமைப் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த இளைஞர், யுவதிகள் மேலும் கூறியதாவது,
"பூந்தோட்டம் முகாமில், தற்காலிகக் கொட்டகைக்குள் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தோம். அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் இருக்கிறார்கள். அவர்களுக்காக முறையான வீடு, மலசலகூடம், மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கிறார்கள். இங்குள்ள மாணவர்கள் கூட, கல்வியைத் தொடர முடியாத நிலையில் பாடசாலைக் கல்வியை இடை விடுபவர்களாகவுள்ளனர். இவ்வாறான துன்பங்களுடன், யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகளின் பின்னும் மக்கள் வாழ்வது தொடர்பில், தென்பகுதிளில் வாழும் பலருக்கும் தெரியாது.
"இங்குள்ள மாணவர்கள், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கல்வியைத் தொடர முடிந்த உதவிகளையும் பெற்றுக் கொடுக்க முயல்வோம்” எனத் தெரிவித்தனர்.
36 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
5 hours ago