2025 மே 02, வெள்ளிக்கிழமை

வடகடலில் எலும்புகள் கரையொதுங்கின

Editorial   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செந்தூரன் பிரதீபன்

தொண்டமனாறு உயரப்புலம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக் கூடென சந்தேகிக்கப்படும் பாகங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மனித எச்சங்களென சந்தேகப்படுவது தொடர்பில் மீனவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாருடைய சடலம் என்பது இதுவரை அடையாளம் காண முடியாத நிலையிலும் ஆணா, பெண்ணா என அடையாளப்படுத்த முடியாத அளவில் இவை காணப்படுகின்றன.

 வட கடல் கரையோரங்களில், மனித உடல்கள் கரையொதுங்குவதும் ,மனித எச்சங்கள் கரையொதுங்கும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால், அவ்வாறான சடலங்களில் எந்தவொரு சடலமும் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .