2025 மே 19, திங்கட்கிழமை

வடக்கில் கடும் காற்று: படகு சேவைகள் இடைநிறுத்தம்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கில், காற்றின் வேகம் அதிகரித்தமை காரணமாக, நெடுந்தீவு-குறிகாட்டுவான் வரையான படகு சேவைகள், இரண்டு நாள்களாக இடம்பெறவில்லையென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக் கடற்பரப்பில் இருந்து 540 கிலோமீற்றர் தொலைவில் நேற்று (16) மாலை நிலைகொண்டிருந்தது. அது தமிழகத்தின் வடக்கு, ஆந்திராவை நோக்கி நகர்கிறது.

இந்நிலையில், வடக்கில், கடந்த இரண்டு தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் படகு சேவைகள் இடம்பெறவில்லயென, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், தமது இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில், நெடுந்தீவு பிரதேச செயலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

நெடுந்தீவு கடற்பரப்பை அண்டி பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடல் அலையின் கொந்தளிப்பும் சற்று அதிகமாக உள்ளதன் காரணமாகவும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, படகு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X