Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்ஷன் இராமானுஜன்
மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மாத்திர்ம் எவ்வாறு பரவியது?” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (15) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற கூடியது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது,
“இலங்கையை, மலேரியா அற்ற நாடாகப் பிரகடனப்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டு அதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் வழங்கியிருந்தது.
“இந்நிலையில், இந்தியாவில் மிக அதிகளவில் காணப்படுகின்ற ‘அனோபிலிஸ் ஸ்ரிபன்சி’ என்ற நுளம்பு இனமே வடக்கில் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. குறிப்பாக, மலேரியா நோயைப் பரப்பக்கூடிய நுளம்புகள், மன்னார்- பேசாலைப் பகுதியில் கடந்த வருடம் இறுதியில் இனங்காணப்பட்டிருந்தன.
“இந்த நுளம்புகள் தற்போது, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன என்று கூறப்படும் நிலையில், வவுனியா நகர மத்தியிலும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை அண்டியதாகவும் இந்நுளம்பு இனம் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரியவருகின்றது.
“எனவே, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்ற மேற்படி நுளம்பு இனம், உரிய முறையில் இனங்காணப்பட்டுள்ளதா? இத்தகைய நுளம்பு இனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? மேற்படி நுளம்பு இனத்தின் பரவலாக்கங்கள் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு மாவட்டங்களில் காணப்படுகின்றனவா? இக்கேள்விகளுக்கான விளக்கங்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளையும் விரைவாக எதிர்பார்க்கிறேன்” என, அவர் தொடர்ந்து கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago