Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 24 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத், எம்.றொசாந்த்
வடமாகாணத்தில் வைத்தியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார்.
நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகின்றனர்.
நாம் பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும் அதனை கருத்தில் கொள்ளாது வடமாகாணத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
சம்பளம் வழங்கப்படாமல் விடுவது தொடர்பாகவோ சம்பளம் குறைப்பு தொடர்பாகவோ நிறுவனங்கள் முன்னரே அறிவிக்க வேண்டும் என்பது ஸ்தாபன விதி. ஆனால் எதுவும் பின்பற்றப்படாமல் இங்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டு சுகாதார அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களுடன் கலந்துரையாடிய போது அத்தியாவசிய தேவையான சுகாதார துறைக்கு சம்பளங்கள் குறைக்கப்படாது என வாக்குறுதியளிக்கப்பட்டது.
மிகவும் சிக்கலான காலத்தில் நாம் எதிர்கொண்டு சேவைகளைச் செய்யும் போது சம்பள குறைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆகவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாம் எமது தாய்ச்சங்கத்துடன் கலந்துரையாடி எதிர்வரும் காலத்தில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக உள்ளோம் என்றார். (R)
5 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago