2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’வடக்கு - கிழக்கு இணைந்து இருப்பது அவசியம்’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசம், முஸ்லின் அடிப்படைவாதிகளின் தளமாக இருக்கக் கூடாதெனத் தெரிவித்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அவ்வாறான நிலைமை உருவானால் அது இலங்கைக்கு மட்டுமல்ல நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையுமெனவும் கூறினார்.

எனவே, வடக்கு - கிழக்கு இணைந்து இருப்பதே அவசியமாகும். இதனை இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடித்துரைக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் - கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாகவும் சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளின் தாக்குதல்களினால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் இந்திய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திட மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் ஜனாதிபதி, பிரதமர்,கூ ட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்தியாவில் பயிற்சி பெற்ற அமைப்பினர் சிலரும் இதில் தொடர்பு பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்ர்டது.இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னர் சர்வதேச பயங்கரவாத தீவிரவாதத்தை ஒழிக்க நட்பு நாடு என்ற ரீதியில் சகல உதவிகளையும் வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இலங்கையில், பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றால் அது இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வடக்கு - கிழக்கு பிரதேசங்களின் பாதுகாப்பு முக்கியத்துவமாக உள்ளது. எனவே இலங்கையின் வடக்கு - கிழக்கு இணைப்பு எண்பது அத்தியாவசியமாக காணப்படுகின்றது. வடக்கு - கிழக்கு இணைக்கப்பட வேண்டும். அதன் முக்கியத்துடன் என்ன என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்திய பிரதமருக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் வடக்கு - கிழக்கு இணைப்பு பற்றி அக்கறை கொள்ளாது அதனை தடுக்கும் பல பணிகளை செய்கின்றது. குறிப்பாக வடக்கு - கிழக்கு பகுதிகளை இணைக்கும் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதனை எமது தமிழ் தலைமைகளும் தடுக்காது வருகின்றனர். எனவே இந்தியாவிடம் வடக்கு - கிழக்கின் இணைப்பு தொடர்பில் எடுத்துரைத்து தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கு இணைப்புக்கு தொடக்கப் புள்ளியாக இந்த சந்திப்பு அமைய வேண்டும் எனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .