2025 மே 14, புதன்கிழமை

வடக்கு கொள்ளையர்கள் சிக்கினர்

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேர், நேற்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளனரென்று, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கிளடம் இருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர், வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவரெனவும், ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறதெனத் தெரிவித்த பொலிஸார், ஒவ்வொரு மாவட்டத்திலும் 3, 4 பேர் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தத்தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் கூறினர்.

சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில், நேற்று (29) இரவு முற்படுத்தப்பட போது, அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .