Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி,இன்று (11), வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு, சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்கு, சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள் சில தினங்களுக்கு முன்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று நண்பகல் 12 மணியளவில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இருந்து பேரணியாக சென்ற சுகாதார பணியாளர்கள், பண்ணையில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்து, அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் தற்போது பொறுப்பான அதிகாரிகள் இல்லை என்றும் அதேநேரம் பிறிதொரு தினத்தில் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'மாகாண சுகாதார அமைச்சு எந்தவிதமான நியமனங்களையும் தற்போது வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கும் நியமனங்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பு கூற முடியாது. அதற்கு ஆளுநரே பதில் வழங்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த சுகாதாரப் பணியாளர்கள், தாங்கள் நீண்ட காலமாக பணியாற்றி நிரந்தர நியமனத்துக்காக காத்திருக்கும் பொழுது, தம்மை தவிர்த்து விட்டு, தற்போது வந்தவர்களுக்கு நியமனத்தை வழங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.
உடனடியாக நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்தக் கோரி, தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago