2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடபகுதி ஊடகவியலாளர் தாக்குதல் தொடர்பிலும் விசாரணை வேண்டும்

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிலங்கையில் கொலை செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதைப் போன்று, வடக்கிலும் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்படவேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தால் இந்தப் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், வியாழக்கிழமை (05) நடைபெற்ற போதே, இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .