2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபையில் ஆர்ப்பாட்டம்

George   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

தமிழ் மக்களின் மனித உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும், வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்திய   வடமாகாண சபை உறுப்பினர்கள், இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

தேநீர் இடைவேளையையடுத்து, வடமாகாணசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவ வெளியேற்றம், மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்களின் மனித உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .