2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபையால் ஜனாதிபதிக்கு கடிதம்

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன், எஸ்.ஜெகநாதன்

தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு, உரிய தீர்வு வழங்க வேண்டும் என கோரி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு வடமாகாண சபையால் இன்று, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவில் 524 ஏக்கர் தனியாருக்குரிய காணிகள் விடுவிக்கபட வேண்டும். அவற்றில் 243 ஏக்கர் காணி கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், அது விடுவிக்கப்படவில்லை.

இப்பகுதிக்குரிய 84 குடும்பங்களில் 54 குடும்பங்களிடம் தமது காணிகள் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன. எனவே, இவற்றை கவனத்தில் கொண்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X