Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 24 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடமாகாண சபை தொடர்பாக விமர்சனங்களை தான் முன்வைக்கவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரிடம் நேரில் கூறிய வடமாகண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கொழும்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் சந்திப்பின் ஒலிப்பதிவையும் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் உத்துயோகபூர்வமாக திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஆளுநர், ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை(சீடி) முதலமைச்சரிடம் கொடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வடமாகாண சபை தொடர்பான கடுமையான விமர்சனங்களை ரெஜினோல்ட் குரே முன்வைத்ததாக அண்மையில் சர்ச்சை வெடித்தது.
இதனை தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்திய டெலோ அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண ஆளுநரை உடனடியாக மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
தொடர்ந்து, தாம் சர்ச்சையை உருவாக்கும் வகையில் பேசவில்லை என ஆளுநர் தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் சந்திப்பின் ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை வடமாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்திருந்தார்.
இந்நிலையில், சி.வி.யிடம் சீ.டியை கொடுத்துவிட்டு ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், 'நான் மாகாண மக்களுக்கும், மாகாண சபைக்கும் ஒத்துழைப்பு வழங்கவே முயற்சிக்கின்றேன். நான் அவ்வாறு பேசவில்லை. இறுவட்டில் உள்ள ஒலிபதிவை கேட்டால் உண்மை விளங்கும்' என்றுக் கூறினார்.
இறுவட்டைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், 'ஆளுநர் ஒரு சிறந்த மனிதர். புரிந்துணர்வு இல்லாமையினாலேயே இந்த பிரச்சினை வந்துள்ளது என எனது அலுவலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கூறியுள்ளேன்' என்று சொன்னார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago