2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்

George   / 2016 டிசெம்பர் 28 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக புதன்கிழமை (28) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் கல்வி வலயங்களில் எவ்வித ஊதியமும் இன்றி நீண்ட காலமாக சேவையாற்றிவரும் தொண்டர் ஆசிரியர்கள், நிரந்தர நியமனம் கோரி கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இறுதியாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போது, இவ்வருடம் முடிவதற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும், மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணனும் அதே வாக்குறுதியை அளித்த போதிலும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், குறித்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தமை கவலை அளிப்பதாக தொண்டர் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் தாம் ஈடுபட்டுள்ளனர்.

தை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது, தாம் தொண்டர் ஆசிரியர்களாக அல்லது, நியமன ஆசிரியர்களாக கடமையாற்றுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டே குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X