2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வடமாகாணத்தில் நாளை போராட்டங்கள்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன் 

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக, வேலையற்ற பட்டதாரிகளால் நாளை (30) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.  

இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.  

கடந்த 27ஆம் திகதி முதல், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, காலவரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தங்களுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி, வடமாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்களுக்கும் முன்பாக நாளை போராட்டங்களை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .