Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஜூலை 14 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்காமையால், வடமராட்சியில் இன்று (14) காலை முதல் தனியார் பஸ் சேவை முற்றுமுழுதாக முடங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனியார் போக்குவரத்துச் சேவைக்கு அந்தந்த சாலைகளிலிருந்து டீசல் வழங்கும் நடைமுறை இருக்கின்ற போதும் பருத்தித்துறை சாலை முகாமையாளரால் கடந்த ஐந்து நாட்களாக டீசல் வழங்கப்படாமையாலேயே பருத்தித்துறை யாழ்பாணம் மற்றும் கொடிகாமம் சேவைகள் முற்றிலும் முடங்கின.
இந்நிலையில், இன்றிலிருந்து பருத்தித்துறை சாலை முன்பாக தனியார் பஸ்களை நிறுத்தி பஸ் உரிமையாளர்களும் நடத்துநர்களும் டீசல் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.
குறித்த சேவை முடக்கத்தால் இலங்கை போக்குவரத்துச் சேவை பஸ்களில் பொதுமக்கள் மிகவும் நெரிசலாக இன்று பயணித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .