2025 மே 10, சனிக்கிழமை

வடமராட்சி மீனவர்கள் போராட்டத்துக்கு முஸ்தீபு

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டித்து, வடமராட்சி மீனவர்களால், நாளை (14) மெளன கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, இந்தியத் தூதரகத்துக்குப் பேரணியாகச் சென்றடைந்து அங்கு இந்தியத் துணைத் தூதரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்து, தொடர்ந்து நீரியல் வளத்துறை அமைச்சரின் அலுவலகத்துக்குச் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர்.

தொடர்ந்து நீரியல் வளத்துறை திணைக்களம், மாவட்டச் செயலகம் இறுதியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்முக்குச் சென்று மகஜர் கையளித்து தமது போராட்டத்தை நிறைவு செய்யவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X