2025 மே 01, வியாழக்கிழமை

வடமராட்சியில் கஞ்சாவுடன் மூவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 05 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன், எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் - வடமராட்சி, திக்கம் பகுதியில் 1kg 900g கஞ்சாவுடன் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 1kg 900g கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் திக்கம், தும்பளை, மற்றும் பலாலி அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியையும் நீதிமன்றில் ஒப்படைக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .