2025 மே 01, வியாழக்கிழமை

’வடமராட்சியை முடக்க இன்னும் தீர்மானிக்கவில்லை’

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-என்.ராஜ்

தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், வடமராட்சி பிரதேசத்தில் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதனால், சுகாதாரப் பிரிவு அவருடைய தரவுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்களென்றார்.

அதனுடைய பின்னணி தொடர்பாக ஆராய்ந்த பின்னரே, அதனை முடக்குவதாக இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியுமெனவும, அவர்; கூறினார்.

எனினும், சுகாதாரப் பிரிவினராலேயே அந்த முடிவு அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானமில்லை எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .