2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

‘வடமாகாண சபையின் அறிவிப்பு வேதனை தருவதாக உள்ளது’

Editorial   / 2018 மே 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக வடமாகாண சபையின் அறிவிப்பு வேதனை தருவதாக உள்ளது” என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், “தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதுக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் கடந்த பல வாரங்களாக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தோம். கடந்த ஆண்டுகளில் இந்நிகழ்வுகளை தனித்து நடாத்தியவர்களோடு உரையாடி ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கான எமது முயற்சிகள் முன்னேற்றகரமாகவே அமைந்திருந்தது.

பல்வேறு அரசியல் செயற்பாட்டுக் குழுக்களும் அமைப்புக்களும் எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன. கடந்த ஆண்டு நிகழ்வுகளை நடாத்திய தரப்புக்கள் கூட தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தன. ஆனால் தற்போது வடமாகாணசபை தாமே இந்நிகழ்வை நடாத்துவோமென அறிவித்துள்ளமை எமக்கு மனவேதனையைத் தந்திருக்கிறது.

வடமாகாணசபை இந்நிகழ்வை நடாத்துவதானது மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் நிகழ்வுகள் பிரிந்து நடாத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என்பதை நாம் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .