2025 மே 12, திங்கட்கிழமை

வடமாகாண முதலமைச்சர், விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

க. அகரன்   / 2018 மே 30 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கியமையை கண்டித்து வடமாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து, வவுனியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், அமுதம் சேதன விவசாய உற்பத்தி அமைப்பு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கம் என்பன இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக கோசங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டமானது, வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனை முன்பாக ஆரம்பித்து கடைத்தெரு வழியாக யாழ் வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் நிறைவடைந்ததுடன் இறுதியில் முதலமைச்சர் மற்றும் விவிசாய அமைச்சரை கேலி செய்யும் வீதி நாடகமும் இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X