2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘வடமாகாணம் முழுவதும் வாள்வெட்டு இடம்பெறவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடக்கு மாகாணத்தில், சில பிரதேசங்களில் மாத்திரம்தான் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவெனத் தெரிவித்த, வடக்கு மாகாண குற்றத் தடுப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் பி.கணேசநாதன, வடமாகாணம் முழுவதும் வாள்வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாகக் கூற முடியாதெனவும் தெரிவித்தார்.

குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலத்தில், வறுமைக் கோட்டுக்குட்பட்ட 30 மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு இன்று (27) நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வாள்வெட்டுச் சம்பவங்கள், களவு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக, கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைத்துச் செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், அந்த விழிப்புக் குழுக்கள், இரவு நேரத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இதன் பின்னர் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளனவெனவும் கூறினார்.

அத்துடன், "உங்கள் பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில், பொலிஸாருக்கு அறிவியுங்கள்" என, பொதுமக்களிடம் வலியுறுத்திய அவர், அவ்வாறு அறிவிப்பதன் மூலம், சட்டவிரோதச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X