2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘வந்ததுக்கு இரண்டு பாட்டாவது பாடிவிட்டு போவம்’

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வந்ததுக்கு, இரண்டு பாட்டாவது பாடிவிட்டு போவம்” என வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், வட மாகாண சபையில் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் 98ஆவது அமர்வு இன்று (06) நடைபெற்றது.

சபை அறிவிப்புகளுடன் காலை 9.45 மணிக்கு ஆரம்பமான அமர்வை, 10.15 க்கு ஒத்திவைப்பதாக, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.

இதன்போதே, “வந்ததுக்கு, இரண்டு பாட்டாவது பாடிவிட்டு போவம்” என வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

பின்னர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட அமர்வை நடாத்துவது தொடர்பான விவாதம் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.

இறுதியாக, இம்மாதம் 21ஆம் திகதி விசேட அமர்வு இடம்பெறும் என அவைத் தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து நேற்றைய சபை அமர்வு முடிவுக்கு வந்தது.

இவ்வாறாக குறிப்பிட்ட நேரத்தில் வட மாகாண சபை அமர்வு முடிவுக்கு வந்திருந்த நிலையில், வட மாகாண சபையின் அமர்வொன்றை நடாத்துவதுக்கு, 500,000 ரூபாய் செலவாகின்றது என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X