Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
தமக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 ஆம் திகதியிலிருந்து தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்து அக்காலப் பகுதியிலிருந்தே தமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளும் கிடைக்க ஆவன செய்யுமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு மனு கையளிக்கப்பட்டது.
கைதடியிலுள்ள வட மாகாண பேரவைச் செயலகத்துக்குச் சென்ற வன்னி உதவி ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக வடக்கு மாகாண முதலமைச்சருக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் கையளித்துள்ளதுடன், மனுவின் பிரதியை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிகளில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் சேவையாற்றி வரும் எம்மை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்றப்பட்ட பின்னரும் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமல் எமது சம்பளமும் அதிகரிக்கப்படாத நிலையில் நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.
“நீண்ட காலமாகச் சேவையாற்றி வந்த எமக்கான ஆசிரியர் நியமனம், கடந்த காலங்களில் வழங்கப்படாது நாம் புறக்கணிக்கப்பட்டோம். அந்நிலையே தொடர்ந்தும் இப்போதும் காணப்படுகின்றது. கடந்த 2003, 2009 ஆம் ஆண்டுகளில் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தின் போதும் வன்னிப் பகுதியைச் சேர்ந்த எமக்கு மட்டும்தான் நியமனம் வழங்கப்படவில்லை. எமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரி நாம் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக கடந்த 01.07.2013 அன்றைய தினம் எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாகக் கூறி ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டு மிகமிகக் குறைந்த சம்பளமே எமக்கு வழங்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை முடித்த பின்னர் எம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதாகக் கூறப்பட்ட போதும் நாம் ஆசிரியர் கலாசாலைப் பயிற்சிகளை முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறி 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாது நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றோம்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago