2025 மே 19, திங்கட்கிழமை

வன்முறை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து ஹைஏஸ் வான் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் 6 வாள்களும் மீட்கப்பட்டன என  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை திங்கட்கிழமை (17) இரவு தொடக்கம் இன்று (18)அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள். அவர்கள் அரியாலை, மானிப்பாய், மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற கொள்ளை, அரியாலையில் வங்கி முகாமையாளரின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் பின்னரே முழுமையான விவரங்களை வெளியிட முடியும். சந்தேகநபர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X